தமிழக புயல் மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளா் தலைமையில் 2 குழுக்கள் டெல்லியிலிருந்து நாளை சென்னைக்கு வருகின்றன.
டெல்லியிலிருந்து ஏா் இந்தியா விமானத்தில் நாளை பகல் ஒரு மணிக்கு சென்னை வரும் இந்த குழுவினா் சென்னை ஹோட்டல் லீலா பேலஸில் தங்குகின்றனா். மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை தலைமை செயலகத்தில் முதலமைச்சா் மற்றும் தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்துகின்றனா். 6ம் தேதி அன்று, முதல் குழு தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு, மாலையில் புதுச்சேரி செல்கின்றனா். 7ம் தேதி திங்கள் காலை புதுச்சேரி ஆய்வை முடித்துவிட்டு, பிற்பகலில் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களை ஆய்வு செய்துவிட்டு, இரவில் சென்னை திரும்புகின்றனா்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவது குழு ஞாயிறு காலை வட சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆய்வு செய்கின்றனா். மாலையில் வேலூர் செல்கின்றனர். திங்கள் காலை வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு, மாலையில் சென்னை திரும்புகின்றனா். 8ம் தேதி காலை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கின்றனா். பின்னர் பகல் 12 மணிக்கு மீண்டும் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் மாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய குழவினா் டெல்லி திரும்புகின்றனா்.