செய்திகள்

புயல் சேதங்களை ஆய்வு செய்ய இன்று தமிழகம் வருகிறது மத்தியக்குழு!

புயல் மற்றும் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழு இன்று தமிழகம் வருகிறது.

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையில் 2 குழுக்கள் இன்று மதியம் சென்னைக்கு வருகின்றன. இன்று மாலை 3 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளருடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். பின்பு 6 ஆம் தேதி, முதல் மத்திய குழுவினர் தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு செய்து விட்டு மாலை புதுச்சேரிக்கு செல்கின்றனர். 7ஆம் தேதி புதுச்சேரியில் ஆய்வை முடித்து விட்டு, மீண்டும் தமிழகம் வரும் மத்திய குழுவினர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை ஆய்வு செய்துவிட்டு இரவு சென்னை திரும்புகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இரண்டாவது குழுவினர், வரும் 6ஆம் தேதி வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு மாலை வேலூர் செல்கின்றனர். 7ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு, மாலையில் 2வது குழுவினரும் சென்னை திரும்புகின்றனர். பின்பு 8ஆம் தேதி தலைமை செயலகத்தில், தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்பு அன்று மாலை மத்திய குழுக்கள் மீண்டும் டெல்லிக்கு திரும்புகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது; அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

Saravana

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார்!

Jeba Arul Robinson

“கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலை எப்படி ஒழிப்பார்கள்”

Gayathri Venkatesan

Leave a Reply