புத்தாண்டு தினத்தன்று அதிவேகமாக மற்றும் போதையில் வாகனங்களில் பயணித்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோர் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மெரினா உள்ளிட்ட பகுதியில் வழக்கமாக கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் விபத்தில்லா பாதுகாப்பான பண்டிகைக்கான நடவடிக்கை ஆண்டுதோறும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதையும் மீறி கிறிஸ்துமஸ் தினத்தன்று 225 பேர் மீது பைக் ரேஸில் ஈடுபட்டதாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 25 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் வரும் புத்தாண்டு தினத்தன்று வாகனங்களில் பயணம் செய்வோர் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றும் பைக் ரேஸ், அதிவேகமாக பயணம் செய்தல் மற்றும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.