முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் எனவும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்றும், தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி முதல் கொரோனா பரவலுக்கு முன்பு செயல்பட்டது போலவே முழு நேரமும் பள்ளிகள் செயல்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார். இதனிடையே நாளை முதல் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கபடவுள்ள நிலையில் பள்ளிகள் முழுமையாக திறந்த பிறகு கல்லூரிகளும் முழுமையாக திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வால் மிதக்கும் உடல்கள்

நேரடியாக பொறியியல் கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி தகவல்

EZHILARASAN D

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா; உதவிக்கரம் நீட்டிய சுந்தர் பிச்சை!

EZHILARASAN D

Leave a Reply