முக்கியச் செய்திகள் செய்திகள்

புதுச்சேரியில் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன்

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் நிதி வழங்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், புதுச்சேரியில் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாகவும், தங்கள் கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடத்த பாஜக திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அனுமதி மறுத்தது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!

Halley karthi

சிவசங்கர் பாபா வழக்கு: சிபிசிஐடியிடம் 3 ஆசிரியைகள் நேரில் ஆஜர்

Gayathri Venkatesan

170 கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்

Saravana Kumar

Leave a Reply