ஆசிரியர் தேர்வு இந்தியா

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளது! – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதிய வேளாண் சட்டங்கள் மூலம், வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

ஒரு நாள் பயணமாக சென்னை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சென்னையை அடுத்த மறைமலை நகரில் விவசாயிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களின் மூலம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2022-ம் ஆண்டில் இது மேலும் உயரும் என்றும் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலன்களுக்காக பாஜக அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். அதிமுக – பாஜக கூட்டணி உட்பட எந்தக் கூட்டணியாக இருந்தாலும், கூட்டணியில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பது இயல்பு என்று பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழ்நாட்டில் NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார், என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா நாளை தமிழகம் வருகை!

Web Editor

தாய் நாட்டிற்கு பெருமைச் சேர்த்த மற்றொரு இந்தியப் பெண் வம்சாவளி!

Gayathri Venkatesan

ஆந்திரப் பிரதேசத்தில் வாயு கசிவால் உடல் நலம் பாதித்த 50 தொழிலாளர்கள்

Web Editor

Leave a Reply