பிரிட்டனில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்நாட்டில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 7 கோடியே 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அனுமதியளித்த பிரிட்டன் அரசு அந்நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரிட்டன் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய பாதிப்பு காரணமாக அந்நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்க நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார், இந்த புதிய வைரஸ் பிறழ்வு சாதாரண கொரோனாவை காட்டிலும் 70 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கனடா சவுதி அரேபியா, ஜெர்மனி உள்ளிட நாடுகள் வைரஸ் பிரிட்டனுக்கு விமான சேவைகளை நிறுத்தியுள்ளதோடு அங்கிருந்து வரும் விமானங்களுக்கும் தற்காலிகமாக தடை விதித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவிலும் பிரிட்டன் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் பிறழ்வு காரணமாக பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தடையும் விமானங்களில் உள்ள பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.