பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கிருந்து தெலங்கானா வந்த 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று சாதாரண கொரோனாவை காட்டிலும் 70% பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பிரிட்டன் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பயணத்தடைகளை விதித்துள்ளன. இதனிடையே இந்தியாவில் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பிரிட்டனில் இருந்து தெலங்கானா வந்த 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது,. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 9 ஆம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய 1200 பேரில் 962 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தோன்றுவது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத் துறை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க இங்கிலாந்திலிருந்து அல்லது திரும்பி வந்தவர்களைக் கண்டுபிடித்து சோதனை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.