கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு காரணமாக பிரிட்டனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கும் இஸ்ரேல், துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயணத்தடைகளை விதித்துள்ளன.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கடந்த சில தினங்களாக பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவின் புதிய பிறழ்வு சாதாரண கொரோனாவை காட்டிலும் 70% பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக ஏற்கனவே பிரிட்டனுக்கு பல்வேறு நாடுகள் பயணத்தடைகளை விதித்திருந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கும் பயணத்தடைகளை சர்வதேச நாடுகள் அறிவித்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளதால் இஸ்ரேல், துருக்கி, ஜெர்மனி, சவூதி அரேபியா, சுவிட்ஸர்லந்து உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்யத் தடை விதித்துள்ளன. இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் 90 சதவீத ரத்த மாதிரிகளில், புதுவகை கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது.