புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்துத்தடையை மேலும் சிறிது நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தொற்று சாதாராண கொரோனாவை காட்டிலும் 70% அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கனடா, துருக்கி ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு பயணத்தடைகளை விதித்துள்ளன. இதில் மத்திய அரசும் வரும் 31 ஆம் தேதி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியாவில் நுழைய தடை விதித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிரழ்வு கண்டறியப்பட்டுள்ள நிலையில் பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை மேலும் நீட்டிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திசிங் பூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர், இந்தியா-இங்கிலாந்து விமானங்களை தற்காலிகமான இடைநீக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக அலோசிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.