புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அமெரிக்காவின் ஸ்பைசர் தடுப்பு மருந்தை தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்துக்கும் பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை அடுத்து அந்நாட்டு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் தொற்று ஜூன், ஜூலை மாதங்களில் பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே அங்கு கடந்த 2 மாதங்களாக கொரோனாவின் இரண்டாம் அலை வீசி வருவதோடு கொரோனா வைரஸின் புதிய பிறழ்வும் பரவி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பு மருந்தை பிரிட்டன் அரசு நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனாவும் அங்கு அதிகரித்துள்ள சூழலில் ஆக்ஸ்ஃபோர்ட் நிறுவனத்தின் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்தையும் நோயாளிகளுக்கு வழங்க பிரிட்டன் அரசு தற்போது அனுமதியளித்துள்ளது. இதற்காக இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் வழங்கிய பரிந்துரைக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராசென்கா ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கும் அனுமதியளித்த உலகின் முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளது.