முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்திய அதிமுகவுக்கு அதிக வாக்கு வரும் என்பதால், தபால் வாக்குக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி மதுரையில் உள்ள வியாபாரி சங்க பிரதிநிதிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மதுரையின் வளர்ச்சிக்கு வியாபாரிகள் பங்கு மிக முக்கியமானது என்றும், வியாபாரிகளிடம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வியாபாரிகள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், முதல்வர் பழனிசாமி வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல்வர், துணை முதல்வர் வர வேண்டி அழைப்பு விடுக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘ஜனநாயக நாட்டில் திமுக தலைவரும் முதல்வர் ஆக ஆசைப்படலாம், திமுக தலைவருக்கும் முதல்வராகும் ஆசை உள்ளது. புதிய வகையான கொரோனா தொற்றை கண்டு பயப்பட தேவையில்லை, தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது” என கூறினார்