புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பு மருந்து வேலை செய்யாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தொற்று சாதாராண கொரோனாவை காட்டிலும் 70% அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கனடா, துருக்கி ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு பயணத்தடைகளை விதித்துள்ளன. இதில் மத்திய அரசும் வரும் 31 ஆம் தேதி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியாவில் நுழைய தடை விதித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருப்பினும் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு எதிராக கொரோனா தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வந்தாலும் மக்களிடையே ஒருவகை அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜய் ராகவன்,
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்து புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக நிச்சயம் வேலை செய்யும். இந்த மருந்து வேலை செய்யாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.