31.3 C
Chennai
April 24, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்!

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அண்மையில் உறுதிபடுத்தியதையடுத்து, அவரது 70-வது பிறந்த நாள் விழாவை ரசிகர்கள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், ரஜினிகாந்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இதைப்போல பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, “உங்களுடைய கனிவான பிறந்தநாள் வாழ்த்துதலுக்கு நன்றி” என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading