உலகம்

பிரிட்டன், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து தென் கொரியாவிலும் பரவியது புதிய வகை கொரோனா வைரஸ்!

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளை தொடர்ந்து தென்கொரியாவிலும் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்படுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று சாதாரண கொரோனாவை காட்டிலும் 70% பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பிரிட்டன் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பயணத்தடைகளை விதித்துள்ளன. இதனிடையே நேற்று முந்தினம் பிரிட்டனில் இருந்து வந்த 4 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்திருந்தது. இதனால் புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையின் ஸ்பெயினும் இணைந்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தென்கொரியாவிலும் 3 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம், கடந்த 22 ஆம் தேதி பிரிட்டனில் இருந்து தென் கொரியா வந்த 3 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மூன்று பேருக்கும் புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இதனைதொடந்து வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய வடகொரியா!

இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர்!

12 நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு காய்ச்சல்

EZHILARASAN D

Leave a Reply