புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரிட்டன் விமானங்கள் இந்தியாவுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தொற்று சாதாராண கொரோனாவை காட்டிலும் 70% அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கனடா, துருக்கி ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு பயணத்தடைகளை விதித்துள்ளன. இதில் மத்திய அரசும் வரும் 31 ஆம் தேதி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியாவில் நுழைய தடை விதித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே இந்தியாவில் இதுவரை பிரிட்டனில் இருந்து வந்த 20 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பிரிட்டன் விமானங்களுக்கான போக்குவரத்துத்தடையை மேலும் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்தி விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி, 2021 ஜனவரி 7 ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரான விமான இயக்கம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.