அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ள ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து நல்ல முடிவை வழங்கி வருவதை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் நோயாளிகளுக்கு அந்த தடுப்பு மருந்தை வழங்க பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும்
பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் முதலாம் அலை காரணமாக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் தற்போது வைரஸின் இரண்டாம் அலையும் அங்கு தாக்கி வருகிறது. இதனிடையே கொரோனா தடுப்பு மருந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ள உலக நாடுகள் அதனை மக்களுக்கு விநியோகம் செய்யவும் ஆயத்தமாகி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே அமெரிக்காவின் ஃபைசர் , இங்கிலாந்தின் ஆஸ்ட்ரா சென்கா. ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை அடுத்த வாரம் முதல் நோயாளிகளுக்கு வழங்க பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வரும் 9 ஆம் தேதிக்குள் இங்கிலாந்தில் உள்ள பெரும்பலான மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வந்து சேரும் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளது.