பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த வைரஸ் தொற்று பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் சுகாதாரப்பணியாளர்கள், உலக தலைவர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. இதுவரை இந்த நோயால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் பொல்செனேரோ ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரிசையில் தற்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் இணைந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று கண்டறியப்பட்டது. அரசின் விதிமுறைகளின் படி அதிபர் மேக்ரோன் ஏழு நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார். எனினும், ஆன்லைன் வாயிலாக அவர் தனது பணிகளை தொடர இருக்கிறார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.