உயிரிழப்பு செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூராய்வு இன்று நடைபெறுகிறது.
தனியார் தொலைக்காட்சி தொடரில், முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ்பெற்றவர் சித்ரா. இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த நிலையில், படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகேயுள்ள, பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். சித்ராவுடன் அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்தும், தங்கியிருந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து அதிகாலையில், விடுதிக்கு திரும்பிய நடிகை சித்ரா, தமது அறையில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், சித்ராவின் கழுத்து தாடையில் காயங்கள் இருப்பதால், அவரது மரணத்தில் மர்ம இருப்பதாக சித்ராவின் பெற்றோர் கூறியிருப்பது, சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நடிகை சித்ராவின் உடலை அம்பத்தூர் வட்டார கேட்டாட்சியர் லாவண்யா ஆய்வு செய்தார். சித்ராவின் உடற்கூறாய்வு இன்று நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.