தமிழகம்

வீடு கட்டும் திட்டம்: தமிழக அரசின் பங்கு தொகையை உயர்த்திய முதல்வர்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்படும் தமிழக அரசின் பங்கு தொகையை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், 2016-17 ஆண்டு முதல் 2019-20ம் ஆண்டு வரை, தமிழகத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 4 லட்சத்து ஆயிரத்து 848 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு 60 சதவீத பங்குடன் 72 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 40 சதவீத பங்குடன் 48 ஆயிரம் ரூபாயும் வழங்கியதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மேற்கூரை அமைக்க ஒரு வீட்டுக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரத்தை, ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்துவதுடன், நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கான ஊதியமும், கழிவறை கட்ட 12 ஆயிரமும் சேர்த்து தமிழக அரசால் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால், ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 2 லட்சத்து 75 ஆயிரத்து 40 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக, ஆயிரத்து 805 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இரண்டரை லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு விருதுகள்

Saravana Kumar

விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

Jeba Arul Robinson

“தமிழகத்தில் குடும்ப அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்” – அமைச்சர் கிஷன் ரெட்டி

Niruban Chakkaaravarthi

Leave a Reply