செய்திகள்

பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்!

திருச்சுழியில் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடைய சேர்வைக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், இவரது மனைவி முத்துலட்சுமி (22). முத்துலெட்சுமிக்கு நேற்று இரவு 11 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நள்ளிரவில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் உள்ள 108 அவசர ஊர்திக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நள்ளிரவில் அழைப்பை ஏற்று உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நாராயணசாமி மற்றும் மருத்துவ உதவியாளர் அன்புராஜ் இருவரும் கர்ப்பிணி பெண்ணை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்பொழுது ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தையும், தாயும் நலமுடன் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிறப்பாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கும், மருத்துவ உதவியாளர் அன்புராஜ்க்கும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!

Gayathri Venkatesan

இலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்

Jeba Arul Robinson

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்

G SaravanaKumar

Leave a Reply