முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பாஜக எம்எல்ஏ மகன் கைது – வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல்!

பெங்களூருவில் பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகம் மாநிலம், தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாதல் விருபாஷப்பா. இவரது மகன் பிரசாந்த் மாதல். இவர் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று பெங்களூருவில் பொதுப்பணித் துறையில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் துறைக்கு ரசாயனப் பொருட்கள் வாங்குவது தொடர்பாக டெண்ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பல ஒப்பந்ததாரர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் ஒரு ஒப்பந்ததாருக்கு டெண்டர் வழங்க தலைமை கணக்கு அதிகாரியான பிரசாந்த் மாதல் ரூ.81 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்பந்ததாரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று மாலை முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை தனது தந்தையின் அலுவலகத்திற்கு வந்து தருமாறு பிரசாந்த் மாதல் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பாஜக எம்எல்ஏ மாதல் விருபாஷப்பா அலுவலகத்தில் நேற்று மாலை லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் என கட்டுக் கட்டாக ரூ.40 லட்சம் ரொக்கம் உள்பட ரூ.1.7 கோடி மதிப்பிலான பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்ததுடன், தலைமை கணக்கு அதிகாரி பிரசாந்த் மாதலையும் கைது செய்தனர்.

இந்நிலையில், லஞ்சப் புகாரில் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சுமார் ரூ.6 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதில் கால தாமதம் கூடாது’: அன்புமணி ராமதாஸ், எம்.பி

Arivazhagan Chinnasamy

கொரோனா 2வது அலை: வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களுக்கு கட்டாயப் பரிசோதனை!

EZHILARASAN D

கடன் தொல்லை; 3 பேர் தூக்கிட்டு உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy