உலகம்

பாகிஸ்தானில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 13 உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகளுடம் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து நார்ங் மண்டியில் உள்ள நெடுஞ்சாலையில் வந்தபோது அப்பகுதி பனி மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பேருந்தும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த சமயத்தில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் பேருந்து மற்றும் காரில் பற்றிய தீயை கட்டுப்படுத்தியதோடு விபத்தில் காயமடைந்தவர்களையும் மீட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பே படுகாயங்களுடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள பஞ்சாப் மாகாண முதலமைச்சர் உஸ்மான் பஜ்தார் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா காலத்தில் உலகிலேயே மிகப்பெரும் தொங்கும் பாலத்தைத் திறந்த போர்ச்சுகல்!

Halley Karthik

சகிப்புத் தன்மையை வளர்க்க ஸ்கர்ட் அணிந்து பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்!

Halley Karthik

சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா… தலைநகர் பெய்ஜிங்கில் அவசர நிலை பிரகடனம்!

Saravana

Leave a Reply