திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழனியை பிரித்து தனிமாவட்டமாக உருவாக்கவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர்சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் பேசிய விக்ரமராஜா, கொரோனாவால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், வியாபாரிகள் மீதான விதிமீறல் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரையில் இருந்து சென்னை வரை செல்லும் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழகத்தில் ஒரு தொகுதியை வியாபாரிகளின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.