குற்றம்

பழகிய மூன்றே நாட்களில் சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு… சமூக வலைதளத்தால் நேர்ந்த அவலம்!

சமூக வலைதளம் மூலம் பழகிய மூன்றே நாட்களில் சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வலைத்தளம் மூலம் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமிக்கு சில தகவல்களை பரிமாறி உள்ளான். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான மூன்றே நாட்களில் சிறுவனைத் தேடி 17 வயது சிறுமி திருவள்ளூருக்கு வந்துள்ளார். அங்கே சிறுமியை சந்தித்த சிறுவன், பிறகு சிறுமியை திருப்பாச்சூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்குதான் அந்த சிறுமிக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.

நண்பருடன் சேர்ந்து சிறுமியை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, மனவேதனையுடன் திரும்பிச் சென்றுள்ளார். ஒருகட்டத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பெற்றோரிடம் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக் கூறிக் கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 17 வயது காதலனை கைது செய்தனர். திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அந்த சிறுவனின் நண்பனை தேடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுவனுடன் பழகிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு காவல் அதிகாரி டெரிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை!

Vandhana

வீட்டில் தனியாக வசித்தவர் எலும்புக் கூடாக மீட்பு

Gayathri Venkatesan

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Gayathri Venkatesan

Leave a Reply