பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் குற்ற வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எட்டாம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஐந்து பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பரமக்குடியில் ஆயிர வைசிய சபையின் சார்பில் வியாபாரிகள் உணவகங்கள், மளிகை கடைகள், பேக்கரிகள், நகை கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பரமக்குடி நகர் வெறிச்சோடி காணப்படுகிறது.