பள்ளி விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் மற்றும் உடந்தையாக இருந்த பெற்றோர் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் பகுதியை சேர்ந்தவருடைய மகள் கடந்த 2017-ம் ஆண்டு திருக்குவளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்துள்ளார். பள்ளி விடுமுறைக்காக சிறுமி திருப்பூரில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திருவண்ணாமலை கேட்டவரபாளையம் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் செல்வம்(24) என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வம் மாணவியை அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் மாணவியின் தந்தை மகளை காணவில்லை என திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து திருமணத்திற்கு உதவியாக இருந்த செல்வத்தின் தந்தை முனியாண்டி, தாய் சுசிலா மற்றும் பரசுராமன் ஆகியோர் மீது வழக்குபதிவு தேடி வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செல்வத்தின் தாய், தந்தையை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இன்று செல்வம்(24) போக்சோ சட்டத்திலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பரசுராமன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.