நாய் என்றாலே நன்றியுள்ள உயிரினம் என்று அனைவராலும் போற்றக்கூடிய ஒன்று. மனிதனின் சிறந்த நண்பன் நாய் என்பர். அப்படிபட்ட தன் நண்பனுக்கு 36.29 கோடி ரூபாய் அளவிற்கு உயில் எழுதி விட்டு சென்றுள்ளார், அமெரிக்காவை சேர்ந்த பில் டோரிஸ் எனும் நபர்.
அமெரிக்காவை சேர்ந்த எட்டு வயதான நாய் தான் லுலு. பார்டர் கோலி வகையை சேர்ந்த லுலு பார்பதற்கே அழகாக இருக்கும். நீளமான அடர்த்தியான முடி, சிறிய உயரம் என அனைத்து அம்சமும் கொண்டது இந்த வகை நாய்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக காலமான பில் டோரிஸ், தனது சொத்துகளை தன் செல்லப்பிராணியான லுலுவிற்கு உயில் எழுதி விட்டு சென்றுள்ளார்.
நாயை தனது நண்பரான மார்தா பர்டனின் பராமரிப்பில் விட்டுச் சென்றுள்ளார். “நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை, பில் டோரிஸிக்கு லுலுவை ரொம்ப பிடிக்கும்.” என்கிறார் மார்த்தா.
உயிலின் படி, பில் டோரிஸின் சொத்துக்கள் அனைத்தும் தொண்டு நிறுவனத்திற்கு செல்லும் எனவும், மார்தாவிர்க்கு மாத மாதம் லுலுவின் பராமரிப்பிற்கான பணத்தை மட்டும் அத்தொண்டு நிறுவனம் செலுத்த வேண்டும் என உயிலில் குறிப்பிடபட்டிருந்தது. செல்லப் பிராணிகளுக்கு சொத்துக்களை எழுதி வைப்பது என்பது இதற்கு முன்னர் பல முறை செய்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.