தமிழகத்தில் பலர் ஏசி அறையில் இருந்து கொண்டே உடனடி முதலமைச்சராக வர நினைக்கிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமலைப் கட்சித் தலைவராக மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவர் பேசுவது அவருக்கும் புரியவில்லை, மக்களுக்கும் புரியவில்லை என விமர்சித்தார். மேலும், எம்ஜிஆர், எம்ஜிஆர் எனக்கூறும் கமல் அதிமுகவில் வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்றும், எம்ஜிஆர் தொடங்கிய கட்சி அதிமுகவிற்கே சொந்தம் என்றும் குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பற்றி மக்களிடம் பேச ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா என கேள்வி எழுப்பிய அமைச்சர், அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கு உயிரை கொடுப்போம் எனக் கூறினார். அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்