இந்தியா

பரூக் அப்துல்லா சொத்துக்கள் முடக்கம்!

காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் 11 கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த 2005 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில்,
109 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. இந்த நிதியில் சுமார் 44 கோடி ரூபாயை அப்போதைய ஜம்மு- காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் பரூக்அப்துல்லா மற்றும் சங்க நிர்வாகிகள் கான் மிர்சா, உள்ளிட்டோர் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மோசடி செய்த தொகையை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்நிலையில், நிதி மோசடி விவகாரத்தில் பரூக் அப்துல்லாவிற்கு சொந்தமான 11.கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’மழை நீர் வடிகால்களை சரியா தூர் வாரலை..’ கான்ட்ராக்டருக்கு எம்.எல்.ஏ கொடுத்த ’தண்டனை!’

Vandhana

2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மெட்ரோ ரயில் சேவை உள்ள நகரங்களின் எண்ணிக்கை 25 ஆக உயரும்; பிரதமர் மோடி தகவல்!’

Saravana

ராமர் பாலம் வழக்கை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

Jayasheeba

Leave a Reply