இந்தியா

பயன்படுத்தப்படாத 70 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு பொது இடங்களில் வெர்டிகல் கார்டனை அமைத்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பயன்படுத்தப்படாத 70 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அழகிய வெர்டிகல் கார்டனை ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

இந்தியாவில் நகரமயமாக்கள் தொழில்துறை வளர்ச்சி, வாகனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே காற்று மாசை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் தொண்டு நிறுவனங்களும் பொது இடங்களில் மரம் நடுவது, வெர்டிக்கல் கார்டன் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் காசுமாற்றை குறைக்க பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த ரோகித் மெக்ரா என்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர் 70 டன் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி அழகிய வெர்டிக்கல் கார்டன்களை பொது இடங்களில் அமைத்துள்ளார். இந்த தோட்டங்கள் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடை ஈர்ப்பதுடன், மனிதனுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் வெளிப்படுத்தும். மேலும் சுகாதாரமான சூழல் உருவாகும்.

இது குறித்து தெரிவித்துள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரி ரோகித் மெக்ரா,
குறைந்தது 70 டன் பயன்படுத்தாத பிளாஸ்டிக் பாட்டில்களை பானைகளாகப் பயன்படுத்தி, 500 க்கும் மேற்பட்ட செங்குத்து தோட்டங்களை பொது இடங்களில் அமைத்துள்ளோம் என தெரிவித்தார்.

“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதிக காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததாக என் குழந்தைகள் என்னிடம் கூறினர். இது என்னை சிந்திக்க வைத்தது. ஏன் நம் குழந்தைகளுக்கு சுத்தமான காற்றை கூட வழங்க முடியவில்லை என்று வருத்தப்பட்டேன்.

இதனை தொடர்ந்து பஞ்சாப்பில் பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வெர்டிக்கல் கார்டனை அமைத்துள்ளோம். இது நகர்ப்புற பசுமைக்கு ஒரு செலவு குறைந்த தீர்வாகும். இந்த தோடத்துக்கு சொட்டு நீர் பாசனம் செய்வதால் 92% தண்ணீரை மிச்சப்படுத்துகின்றன என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜகவில் இணைந்தார் ஹர்திக் படேல்

Mohan Dass

“வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்”- மத்திய அமைச்சர்

Halley Karthik

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு

Halley Karthik

Leave a Reply