வணிகம்

பட்டுப் புழுக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது; பட்டுகளை தயாரிக்கும் புதிய இயந்திரம்!

ட்டுப் புழுக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் பட்டுகளை உற்பத்தி செய்வதற்கு இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பட்டுப் புழுக்களில் இருந்து பட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த லார்வாக்களுக்கு மல்பெரி இலைகளை உணவாக அளித்து பட்டுகளை தயாரிக்கின்றனர். இதில் கோடிக்கணக்கான பட்டுப் புழுக்கள் உயிரிழக்கும். தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். கூடாரம் போன்ற அமைப்பு கொண்ட இதில் 17,532 பட்டுப் புழுக்கள் இணைந்து பட்டு உற்பத்திக்கு பயன்படுகின்றன. இந்த செயல்முறையின் போது லார்வாக்கள் உயிரிழப்பதில்லை என்பதே சிறப்பம்சம். 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் உள்ள மற்றொரு அமைப்பு, பட்டுப்புழுக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அந்த இயர்ந்திரத்தில் சீட் ஒன்று விரிக்கப்பட்டுள்ளது. அதில் புழுக்கள் தங்கள் பட்டு நூலை வெளியேற்றுகின்றனர். மனிதர்கள் மற்றும் பட்டுப் புழுக்களின் கூட்டு முயற்சியால் 10 நாட்களில் பெரிய பட்டு நூல் தயாராகிறது. இது நமது கோளின் விட்டத்தை விட அதிகம் என கூறுகின்றனர். இதில் புழுக்களே டிசைனர்களாக மாறுகின்றன. பட்டுப் புழுக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் இவை தயாரிக்கப்படுவதால் மக்கள் மத்தியிலும் இதற்கு வரவேற்பு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய எலான் மஸ்க் விதித்த நிபந்தனை

EZHILARASAN D

விவசாயிகள் இடம் தர முன்வந்தால் அதை அரசு பெற்றுக் கொள்ளும்; அமைச்சர் தங்கம் தென்னரசு

G SaravanaKumar

600 ஊழியர்களை நீக்கிய தனியார் நிறுவனம்

EZHILARASAN D

Leave a Reply