இந்தியாவில் நேரடி பண பரிமாற்றத்தை நிறுத்தி டிஜிட்டல் முறைக்கு மாற்றிய பெருமை Google Pay முக்கிய பங்காற்றுகிறது என்றே சொல்லலாம்.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இந்திய நடுவண் அரசு 500, 1,000 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பு வெளியிடுகிறது. பலர் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் ATM களிலும், வங்கிகளிலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பண பரிமாற்றம் செய்யப்படும் என்ற நிலையில், அந்த நேரத்தில் ICICI மற்றும் HDFC வங்கிகள் (Cards) அதாவது டெபிட் மற்றும் கிரெட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தும் முறை மெல்ல மெல்ல அறிமுகமானது. அதற்கு முன்பு பெட்ரோல் பங்க் மற்றும் பெரிய நிறுவனங்களிலும் மட்டும் பயன்படுத்தி வந்த Cards Accepted சிறு சிறு நிறுவனங்களிலும் உட்புகுந்தது.அதே சமயம் Paytm எனும் பணபரிமாற்ற நிறுவனமும் தனது சேவையை விரிவுபடுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பணமதிப்பிழப்பு ஏற்பட்ட காலங்களில் கார்டுகளில்( Debit card, Credit Card) தேர்வு செய்யும் போது சில சிறு கடைகள் மற்றும் நிறுவனங்கள் கமிஷன் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளரிடம் வசூலித்தனர். வசூல் செய்யும் இத்தொகைக்கும் அந்தந்த வங்கி நிறுவனங்களுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. இக்காலகட்டத்தில் Paytm பட்டிதொட்டியெல்லாம் விரிவுபடுத்தியது. Easy to Access அதாவது QR Code மூலம் எளிதாக செயல்பாடுகளும் இருந்தது.
வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து paytm க்கு பரிமாற்றப்படும் பணத்திற்கு சேவை வரி விதிப்பதில்லை. ஆனால் paytmல் உள்ள பணத்தை வங்கிக்கு மாற்றம் செய்யும் போது குறிப்பிட்ட தொகையை கமிசனாக எடுத்தது. இக்காலகட்டத்தில்தான் டிஜிட்டல் இந்தியா மேலும் பரிமாண வளர்ச்சியடைந்தது. இதன் பின்தான் நேரடி பணம் பரிமாற்றம் வெகுவாக குறைந்தது. Paytm ல் குறிப்பிட்ட தொகை மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும் என்பதால் பெரிய தொகைக்கு மக்கள் வங்கிகளையோ, ஏடிஎம் மையங்களையோ நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
2009 ஆம் ஆண்டுவரை ATM மையங்களில் 50ரூபாய் நோட்டுகள் வந்துகொண்டிருந்தது. அதன்பின் ATMகளில் 50ரூபாய் நோட்டுகளும் நிறுத்தப்பட்டது. குறைந்தபட்சமாக 100ரூபாய் நோட்டுகள் மட்டுமே எடுக்க முடியும். அதுபோக வங்கிகளும் ATM சேவைக்கு கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது. பின் Master Cards கள் இந்திய நிறுவனமான Rupay கார்டுகளாகவும் மாற்றப்பட்டது. இதன் மூலம் நாட்டின் வருமானம் சற்று உயர்ந்தது என்றே சொல்லலாம். 2017 ஆம் ஆண்டு Google நிறுவனம் மெல்ல மெல்ல இந்தியாவில் தனது சேவையை விரிவுப்படுத்தியது. சுலபமான முறை நேரடியாக UPI மூலம் Tez எனும் செயலி மூலம் விரைவான சேவையை பட்டிதொட்டியெல்லாம் நிறுவியது. Paytm யை பின்னுக்கு தள்ளி அசுர வளர்ச்சியடைந்தது. பண புழக்கம் வெகுவாக குறைந்தது. இக்காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு போன்களும் வளர்ச்சியடைந்தது Google Pay தனது வணிகத்துக்கு நன்கு பயன்படுத்திகொண்டது. அனைத்து சேவைகளையும் தங்களது நிறுவனத்துடன் இணைத்தது( Travels,shopping, Electricity, Bills etc).
ஒருகட்டத்தில் 2 ரூபாய்க்கு ஷாம்பு பாக்கெட் வாங்குவதற்கு கூட Google pay யை பயன்படுத்தும் அளவிற்கு அத்தியாவசிய ஆப் (App)பாக உருவெடுத்தது. வங்கிகளில் ஏடிஎம், செக், ஆன்லைன் பேங்கிங், மொபைல் மற்றும் எஸ்.எம்.எஸ் அலர்ட் என அனைத்திற்கும் தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படும் ஆனால் Google pay வாடிக்கையாளரிடம் எந்த வித கட்டணமும் எடுப்பதில்லை மாறாக Gift கள் வழங்கும் என்பது மேலும் இதன் சிறப்பாகும். கடந்த வாரம் Google pay மற்றும் phonephe, amazon pay போன்ற நிறுவனங்கள் ஜனவரி 2021 மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அத்தகவல் உண்மையில்லை என அந்நிறுவனம் சில வாரங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது.
தற்சமயம் அந்நிறுவனம் இந்தியாவில் அடிக்கடி தொழில்நுட்பகோளாறுகளில் சிக்கியது. பின் அதனை முற்றிலுமாக சரிசெய்து தனது சேவையை மீண்டும் புத்துணர்வு பெற வைத்துள்ளது. சில நேரங்களில் பணபரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும்போது அவை 2 முதல் 3 வேலை நாட்களில் மீண்டும் நமது கணக்கிற்கு பணத்தொகை வரும் அதனை தற்போது 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என்ற தகவலும் முக்கிய நகரங்களில் வாடிக்கையாளர் சேவை மையத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-மா.நிருபன் சக்கரவர்த்தி