கைலாசாவிற்கு 3 நாட்கள் இலவச ஆன்மிக சுற்றுலாவிற்கு வருகை தர பக்தர்களுக்கு சாமியார் நித்தியானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
பலாத்கார வழக்கு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா, அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வருகிறார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள இவர், இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்தி இருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள், கைலாசாவிற்கான மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்து மூன்று நாள் இலவச விசாவை பெற்று கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார். கைலாசாவிற்கு விசா பெற்றவர்கள், ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால், அங்கிருந்து கைலாசாவிற்கு, கருடா என பெயரிடப்பட்ட சிறிய விமானத்தில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர் எனவும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.