கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் முதியோருக்கு முன்னுரிமை தரலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், புதிய படுக்கை வசதிகளை தொடங்கி வைத்து, ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 27 மாவட்டங்களில் 15-க்கும் குறைவாகவே தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதாக தெரிவித்தார். இதை பூஜ்யமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தயக்கம் இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேபோல் கொரோனா தடுப்பூசி போடும் போது முதியோருக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.