சினிமா

நெல்சன் இயக்கத்தில் விஜய் 65… சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா அறிவிப்பு!

நடிகர் விஜய்யின் 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய்யின் 64-வது படமான மாஸ்டர் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக அவரின் 65-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஏற்கனவே 65-வது படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சில காரணங்களால் படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் மகிழ் திருமேனி, நெல்சன், பேரரசு, மோகன் ராஜா, ஹரி என நீண்டு கொண்டே சென்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் விஜய் 65 திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் பிரபலமானவர் நெல்சன், இவர் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. டாக்டர் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் இவர், விஜய் 65 பட வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செப்.10ல் வெளியாகிறது சந்தானத்தின் ‘டிக்கிலோனா’

Halley Karthik

விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

Halley Karthik

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்

G SaravanaKumar

Leave a Reply