சட்டம்

நீண்டு கொண்டு போகும் இயக்குநர் பாலா மீதான வழக்கு விசாரணை!

விஷால் நடிப்பில் வெளியான ’அவன் இவன்’ திரைப்படம் குறித்து தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஜனவரி 8 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

2011ஆம் ஆண்டு நடிகர்கள் விஷால் ஆர்யா நடிப்பில் டைரக்டர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலையும், சிங்கம்பட்டி ஜமீன்தாரயும் அவதூராக சித்திரித்து காட்சிகள் இடம் பெற்றது. இதற்கு சிங்கம்பட்டி ஜமீனை சார்ந்த சங்கர் ஆத்மாஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்குக்காக ஏற்கனவே நடிகர் ஆர்யா, டைரக்டர் பாலா ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர். விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் கூடுதல் சாட்சியத்திற்காக வழக்கை வரும் ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்து குற்றவியல் நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக பொதுக்குழு வழக்கு – ஓபிஎஸ் விளக்கமனு தாக்கல்

EZHILARASAN D

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம்: மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Jeba Arul Robinson

“ஜி ஸ்கொயர் நிறுவனம்”- அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் தடை

Web Editor

Leave a Reply