
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தமிழகத்தை அச்சுறுத்திய நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி- தமிழகம் இடையே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக கரையை கடந்த போது புதுச்சேரி, கடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதே சமயம் சென்னையிலும் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளான, வேளச்சேரி, விஜயநகர், ராமநகர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அன்னை சத்திய நகர் பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.