தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நவ.,30 அன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
- அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் பாஜக?
- இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
- பாஜகவின் பொது வேட்பாளர்? ; எதிர்த்து நிற்கும் இபிஎஸ்
- தொடர் கன மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- 2 கட்டங்களாக நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு; இன்று தொடங்கி பிப்ரவரி 14 வரை நடைபெறுகிறது
அப்போது, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வேளச்சேரி, தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.