அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா”, ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ், 2024ம் ஆண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவுள்ளது. அதன்படி நிலவுக்கு செல்லவிருக்கும் விண்வெளி வீரர்களின் இறுதி பட்டியலை நாசா தற்போது அறிவித்திருக்கிறது. மொத்தம் 18 பேர் கொண்ட இந்த குழுவில் 9 ஆண் வீரர்களும், 9 வீராங்கனைகளும் உள்ளனர். இதில் சிறப்பம்சமாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா ஜான் வர்புதூர் சாரி இடம்பெற்றுள்ளார்.
யார் இந்த ராஜா சாரி?
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1977-ம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பிறந்தவர் ராஜா சாரி. இவரின் தந்தை ஸ்ரீநிவாஸ் சாரி. ஐதராபாத்தை சேர்ந்தவரான இவர் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். 43 வயதாகும் ராஜா சாரி மாசசூசெட்ஸ் கல்லூரியில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளித்துறையில் பட்டம் பெற்றவராவார். அமெரிக்காவின் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், கடந்த 2017ம் ஆண்டு முதல் நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சியை மேற்கொண்டார். தற்போது ஆர்டிமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வாகியிருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் நிலவில் முதல்முறையாக ஒரு பெண்ணும் 2வது ஆணும் கால் பதிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.