தமிழகம்

நாளை டிஸ்சார்ஜ் ஆகிறாரா நடிகர் ரஜினிகாந்த்? மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் அப்போலா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப பிரபலங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனிடையே அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

அதில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருக்கு ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ரஜினிகாந்தின் டிஸ்சார்ஜ் குறித்து புதிய அறிக்கை ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின்தடை என்று அச்சம் கொள்ள தேவையில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

EZHILARASAN D

கொரோனாவை கிராமத்தைவிட்டு விரட்ட தீ பந்தம் ஏந்தி ஓடிய மக்கள்!

Halley Karthik

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்

Web Editor

Leave a Reply