முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…


ஜே.முஹமது அலி

கட்டுரையாளர்

ஆத்திகம் பேசும் அன்பர்களும், நாத்திகம் பேசும் நண்பர்களும் கேட்கும் கேள்வி, கடவுள் எங்கே இருக்கிறான் என்பதுதான். இன்று நேற்றல்ல, சங்க காலத்திலேயே கேள்வியும் கேட்டு பதிலும் கூறிய கருத்துகளை உள்வாங்கிய இனிய திரையிசைப் பாடல்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..

இறைவன் இருக்கின்றானா என மனிதன் கேட்பதாக வரிகள் அமைத்த கண்ணதாசன், மனிதன் இருக்கின்றானா என இறைவன் கேட்பது போல பாடல் எழுதியுள்ளார். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனக்கூறி, அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதலாவதாக இருப்பது போல், உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றுக்கும் முதல்வனாக ஆதிபகவன் இருக்கின்றான் என கூறுகிறான் வள்ளுவன்.

நம்செயலில் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து தெரிந்து அறிந்து கொள்ள முடியும் என்கிறார் கண்ணதாசன். மனிதனை மறந்தவன் இறைவன் இல்லை என நெற்றியில் அறைந்தாற்போல இந்தப்பாடலில் குறிப்பிட்டிருப்பார்.

ஆனந்தஜோதி திரைப்படத்தில் கண்ணுக்குத் தெரியாமல் கடவுள் இருக்கின்றான் என வரிகள் தருகிறார் கண்ணதாசன். இசையின் உருவமும், உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவமும் கண்ணுக்கு தெரிகிறதா என கேட்டு கடவுள் இருக்கின்றான் என உறுதியாக சொல்கிறார்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி நின்றான் என குறிப்பிடுகிறது திருவாசகம். திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த் தெளிவினுந் தெளிவதாய்ச் சிறந்தவன் இறைவன் என சீறாப்புராணத்தில் குறிப்பிடுகிறார் உமறுப்புலவர். அதுவரை நாத்திகராக இருந்த கண்ணதாசன், ஆணாகி பெண்ணாகி நின்றானவன் என பாடி வைக்கிறார்.

அண்மைச் செய்தி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்

தன்னுள் இருக்கும் இறைவனை விட்டுவிட்டு எங்கெங்கோ தேடி அலைகிறான் மனிதன் என திருவருட்செல்வர் படத்திலும், வண்ண வண்ணப்பூவில் வாசம் செய்யும் இறைவன் என்றும் பாடல் தந்திருப்பார் கண்ணதாசன். ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதாக கூறுகிறார் வாலி.

கோயில் என்றாலும், கோபுரம் என்றாலும் அன்பு தானே இறைவன் ஆட்கொள்ளும் பண்பு.

Advertisement:
SHARE

Related posts

தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்தவர் கைது!

Jeba Arul Robinson

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

Halley Karthik

டவ் தே புயல்: மும்பைக்கு கனமழை எச்சரிக்கை!

Halley Karthik