முக்கியச் செய்திகள் தமிழகம்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 – தமிழக அரசு அரசாணை வெளியீடு

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாக பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையாக 2 முறை, தலா ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கியது. இந்த நிவாரணத்தொகையை நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில், புதிதாக பதிவு செய்தவர்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என உத்தரவிடக்கோரி, நாட்டுப்புறக்கலைஞர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், புதிதாக பதிவு செய்த கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாக பதிவு செய்த தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்ப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 ஆயிரத்து 810 கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்றும், இதற்காக 1 கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

ஸ்டெர்லைட் விவகாரம் : இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Ezhilarasan

நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

Karthick

பிரதமரின் வாரணாசி அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயற்சி; 4 பேர் கைது!

Jayapriya