25.5 C
Chennai
September 24, 2023
ஆசிரியர் தேர்வு இந்தியா

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி! – மத்திய அரசு

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது என்பது குறித்து கடந்த சில நாட்களாக மத்திய அரசு விரிவான தகவல்களை சேகரித்தாக கூறினார். அதன்படி கொரோனா தொற்றுத் தடுப்பில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உட்பட 30 கோடி பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னுரிமை பட்டியலில் இருப்பவர்களுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் ஹர்ஷ் வர்த்தன் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையே ஆந்திரா, அசாம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் நாளை மறுநாள் மற்றும் 29ம் தேதி தடுப்பூசி சோதனை முறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை எவ்வாறு பதப்படுத்துவது, தடுப்பூசியை எவ்வாறு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது, தடுப்பூசி செலுத்தும்போது மக்கள் கூட்டத்தை எவ்வாறு கையாள்வது உள்ளிட்டவை தொடர்பாக சோதனை நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்துவதற்காக லட்சத்தீவை தவிர, நாடு முழுவதும் மாநில அளவில் 7 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
681 மாவட்டங்களில் 49 ஆயிரத்து 604 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

10ம் வகுப்பு தேர்ச்சி; தனக்குத் தானே வாழ்த்துக் கூறி பிளக்ஸ்

Arivazhagan Chinnasamy

ஏர் இந்தியா பங்குகளை வாங்குகிறதா டாடா!

Halley Karthik

குடியரசு தலைவருடன் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசினோம்- முதலமைச்சர்

G SaravanaKumar

Leave a Reply