நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு 8.0 அமல்படுத்தப்படவுள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசின் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வு 7.0-வில் நடைமுறையில் இருந்த மெட்ரோ ரெயில் சேவை, கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி, திரையரங்குகள் செயல்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி உள்பட அனைத்தும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்