நல்லது செய்தால், மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை கேரள உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள் ,152 ஊராட்சி ஒன்றியங்கள், 941 கிராம பஞ்சாயத்துகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நல்லது செய்தால், மக்கள் ஆதரிப்பார்கள் என்பது கேரள உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் வழியில் தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுக்கும் தேவை வந்தால் குரல் கொடுப்பேன் எனவும் கூறியுள்ளார். திமுகவோடு கூட்டணி தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்றும், யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.