சென்னை புதுப்பேட்டை அருகே மர்ம நபர்களால் இளைஞர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். புதுப்பேட்டையில் கூலி வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு அங்குள்ள நடைமேடையில் உறங்க சென்றுள்ளார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கழுத்து அறுக்கப்பட்ட சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் காவல் துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
நடைமேடையில் தூங்கிய இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.