பிரபல திரைப்பட நடிகை ராகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த வைரஸ் தொற்று பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் சுகாதாரப்பணியாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா உள்ளிட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது பிரபல நடிகை ராகுல் பிரீத் சிங்கும் இணைந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் பிரீத் சிங்,
எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன். நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும் என பதிவிட்டுள்ளார்.