பிரபல நடிகை திரிஷா, யுனிசெப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார். இவர் அந்த அமைப்பின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல்திட்ட நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு திருப்போரூர் அருகே திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் வகையில் நடைபெற்ற கழிப்பறை கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து. இதில் பங்கேற்ற நடிகை திரிஷா, தாமே செங்கற்களை அடுக்கி கழிவறை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். அவரின் இந்த செயலுக்கு அப்போது பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், திரிஷாவின் செயலை மேற்கோள்காட்டி தற்போது மற்ற நடிகர், நடிகைகளுக்கும் UNICEF அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள UNICEF அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி ஜாப் சக்காரியா கிராமங்களில் கழிப்பறையின் அவசியத்தை உணர்த்த நடிகை திரிஷா, 3 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டுமானத்தை அவரே தொடங்கி வைத்தார். அப்போது பல லட்சங்களில் சம்பளம் வாங்கிய நிலையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு ரூபாய் கூட நடிகை திரிஷா சம்பளமாக வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே நடிகை திரிஷாவைப் போன்று குழந்தைகள் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மற்ற நடிகர், நடிகைகள் முன் வரவேண்டும் என்று UNICEF அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி ஜாப் சக்காரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.