முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வழக்கில் மாமனிதன் திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும், விநியோக உரிமையை தங்களுக்கு வழங்காமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர் , அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

100 சதவீதம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் – ஆர் கே செல்வமணி

Dinesh A

7 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அனிருத் – தனுஷ்

Vel Prasanth

குடும்பம் தான் முதலில்; பிறகு தான் மற்றவை -ஆலோசனை கூட்டத்தில் விஜய் அறிவுரை

EZHILARASAN D

Leave a Reply